[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

உசிலம்பட்டி அருகே விவசாயி வெட்டி படுகொலை 

the-farmer-as-killed-who-was-sleeping-in-the-night-near-usilampatti

உசிலம்பட்டி அருகே இரவில் தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயியான இவர் அவரது தொட்டத்து வீட்டில் கட்டிட பணி நடைபெறுவதால் இரவு தூங்குவதற்காக சென்றிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவரது மகன்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன்பு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். பின்பு எழுமலை போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழுமலை போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை எழுமலை போலிசார் தேடி வருகின்றனர். வெள்ளைச்சாமிக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இரவில் தூங்க சென்ற விவசாயியை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close