[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

தமிழகத்தில் வாக்களிக்க சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு

six-old-persons-death-during-vote-caste-in-tamilnadu

தமிழகத்தில் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். கோவை காந்தி மாநகர் பகுதியில் வாக்களிக்க வந்த முதியவர் பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம், வேடப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈரோடு சிவகிரியில் வாக்களித்து விட்டு வந்த முதியவர் முருகேசன் வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். 

இதனிடையே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.  ஒடிசாவில் வாக்களிக்க வரிசையில் நின்ற 95 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close