[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு

“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்

admk-plan-to-surround-many-voting-booths-dmk-complaint

மாலை 3 மணிக்கு மேல் தமிழகத்திலுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 40% கடந்து வாக்குப்பதிவு சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் ஆங்காங்கே வாக்கு இயந்திரக் கோளாறு, சிறுசிறு பிரச்னைகள் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திமுக தரப்பிலிருந்து அதிமுக மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குநருக்கு புகார் அனுப்பட்டுள்ளது. அதில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல், திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருவதை பொறுக்க முடியாத ஆளுங்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மாலை 3 மணிக்கு மேல் பல்வேறு வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். 

அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பினை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close