[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

pm-modi-separate-the-country-rahul-gandhi-allegation

பிரதமர் நரேந்திர மோடி நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவித்து வருவதாக காங்கிரஸ் க‌ட்சித் ‌தலைவர் ராகுல் காந்தி குற்ற‌ஞ்சாட்டியுள்ளார். 

அமேதி தவிர கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதனால் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று வயநாடு சென்றுள்ளார். அங்கு பிரம்மகிரி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருநெல்லி கோயிலில் பாரம்பரிய உடையான வேட்டி துண்டு அணிந்து சென்றார். 

அங்கு சிறப்பு பூஜைகள் செய்த அவர் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வழிபட்டார். பின்னர், பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தனது முன்னோர்களுக்காகவும் புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்காகவும் ராகுல் சடங்குகளை செய்ததாக தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு 24 ‌மணி நேரத்திற்கும் 27 ஆயிரம் பேர் வேலை இழந்து வருவதாக குற்றஞ்சாட்டினார். வேலையிழப்பு அதிகரிக்கவும் விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கவும் மோடிதான் காரணம் என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினார். தான் மோடியை போன்றவன் அல்ல என்று ராகுல் தெரிவித்துக்கொண்டார். மேலும், மோடி நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close