[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கரூரில் அதிமுக-திமுக மோதல் - துணை ராணுவப் படை குவிப்பு

karur-dmk-admk-parties-fight-at-campaign-lot-of-police-assembled-there

கரூரில் அதிமுக-திமுக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரங்கள் ஓய்வடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கரூரில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இரண்டு கட்சியினருமே கரூர் பேருந்து நிலையப் பகுதியில் பரப்புரை செய்வதற்காக அனுமதி கேட்டிருந்தனர். 

ஆனால் இரண்டு தரப்பிற்குமே அந்த இடத்தில் அனுமதி வழங்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இந்நிலையில் கரூர் வெங்கமேடு பகுதியிலிருந்து பேரணியை தொடங்கி, பரப்புரையை முடிவு செய்ய அதிமுகவினர் புறப்பட்டனர். அப்போது மற்றொரு பகுதியிலிருந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பரப்புரை செய்துகொண்டு வந்தனர். 

இருவரும் சந்திக்கும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. காவல்துறையினர் இருதரப்பிரனையும் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு சிலரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் கரூர் பேருந்து நிலையப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கரூரில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை இறுதிகட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். 

இதற்கிடையே ட்விட்டரில் பதிவிட்டுள்ள கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, “கரூர் தொகுதியில் நடந்து கொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல. யுத்தம்! நமது இறுதிக்கட்ட பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4-6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்திரவினைப் பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட, அராஜகத்தை விட உண்மை வலிமையானது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close