[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வன்கொடுமை வழக்கிற்கு சிறப்பு நீதிமன்றங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

the-high-court-has-ordered-to-tn-govt-and-high-court-registrar-for-special-courts-to-inquire-into-rape-cases

தமிழகம் முழுவதும் வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசும் உயர்நீதிமன்றம் பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க விழுப்புரம் மற்றும் சிவகங்கையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல பிற மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி, மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் 2012 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அறிவுறுத்தி, திண்டுக்கல், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன. 

Image result for சிறப்பு நீதிமன்றங்கள்

அதன்படி, 2016-17ம் ஆண்டு முதல் 2019-20ம் ஆண்டுக்குள் 16 இடங்களில் மூன்று கட்டங்களாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 2017 ஏப்ரலில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக திண்டுக்கல், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,2 ஆண்டுகளான நிலையிலும், இந்த நீதிமன்றங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும், அரசாணையின்படி சிறப்பு நீதிமன்றங்களை துவங்க உத்தரவிடக் கோரியும் மாற்றம் இந்தியா அமைப்பின் ஏ.நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஏப்ரல் 26ம் தேதிக்குள் தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close