[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மனைவியைக் கண்டுபிடிக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு

husband-petition-in-collector-office-to-find-out-missing-wife

மாயமான மனைவியைக் கண்டுபிடித்து தரக்கோரி கும்பகோணத்தை சேர்ந்தவர் தனது பிள்ளைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவர் இன்று தனது இரு குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர் தனக்கு பிரியா என்பவருடன் திருமணமாகி ஏழு வயதில் மகனும், நான்கு வயதில் மகளும் உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது மனைவி பிரியா, பள்ளியில் பயிலும் தன் மகனுக்கு உணவு கொண்டு சென்றார் என்றும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பிரியாவின் செல்போன் கடைசியாக கோவையில் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்று கூறினார். எனவே இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இரு குழந்தைகளும் தாயில்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறியவர் தனது மனைவியை கண்டுபிடித்து தராவிட்டால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவரிடம் உறுதி அளித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close