[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பூசாரியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை

man-murdered-near-dindigul-police-enquiry

திண்டுக்கல் அருகே கோவில் பூசாரியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் காக்கையன்குளத்துப் பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருக்கு வசந்தா மற்றும் நாச்சி என்ற இரண்டு மனைவிகளும் ஒன்பது பிள்ளைகளும் உள்ளனர். இவர் தற்போது வடமதுரை திருச்சி சாலையில் ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். மேலும் அதிரடி கருப்பணசாமி கோவிலில் பூசாரியாகவும், வடமதுரை பகுதியில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட மந்தை குளம் பகுதியில் முத்துச்சாமி சடலமாக கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துசாமி சொத்து பிரச்னைக்காக  கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்பகை காரணமாக என வடமதுரை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close