[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை வென்றார் தருமபுரி நபீஷா..!

miss-koovagam-at-villupuram

விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் உள்ள விடுதிகளில் குவிந்துள்ளனர். இதனிடையே சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்ற இந்த போட்டியில், தருமபுரியை சேர்ந்த நபீஷா முதலிடம் பெற்றார். கோவையை சேர்ந்த மடோனா இரண்டாம் இடமும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் திரைப்பட நட்சத்திரங்களும் பலர் பங்கு பெற்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close