[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“குரூப் டி ஊழியரை இடமாற்றம் செய்தது செல்லும்”- சென்னை உயர்நீதிமன்றம்

can-transfer-group-d-employee-chennai-high-court

திருவள்ளூர் அரிசி ஆராய்ச்சி நிலைய குரூப் டி ஊழியரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்த உத்தரவை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திரூர் அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் அலுவலக உதவியாளராக 30 ஆண்டுகளாக பணிபுரியும் சந்திரசேகரனை, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் உறுப்பு கல்லூரிக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. குரூப் டி ஊழியரான தன்னை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என்றும், பேராசிரியர் அகிலா என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன்னை இடமாற்றம் செய்ய பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளதாகவும், அந்த இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரியும் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் புதிய உறுப்பு கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ளதால், அங்கு அனுபவம் வாய்ந்தவரும் தேவைப்படும் என்ற நிர்வாக காரணத்திற்காகத்தான் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், வேறு யாருடைய தூண்டுதலின் பெயரிலியோ இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வேளாண் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இடமாற்ற உத்தரவை எதிர்த்து சந்திரசேகர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குரூப் டி ஊழியர்கள் வருமானம் குறைவு என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. இருப்பினும்  நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்தால், அதை ஏற்று கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close