[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

ஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிசாமி விமர்சனம்

dmk-leader-said-story-and-getting-votes-from-public-cm-palanisamy-counter

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் கதை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக முதலமைச்ச‌ர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பிரச்சார களத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடையே கருத்து மற்றும் பிரச்சார மோதல் வெடித்துள்ளது. அந்த வகையில் சமீபகாலமாக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரும் நேரடி விமர்சனங்களையும், தனிமனித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து இன்று முதலமைச்சர் பிரசாரம் செய்தார். முதலில், ராசிபுரத்தில் மக்களிடம் வாக்குச் சேகரித்த முதல்வர், தொடர்ந்து சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

அப்போது பேசிய அவர், தாங்கள் என்ன செய்தோம் என்றும் இனி என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துமே மக்களிடம் எடுத்துரைத்து வருவதாகக் கூறினார். மேலும், மக்களுக்கு நன்மை செய்யும் தேர்தல் அறிக்கைதான் அதிமுகவுடையது என்றும், மாறாக எதையுமே நிறைவேற்ற முடியாதது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளதாக விமர்சனம் செய்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் கதை சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரிப்பதாக விமர்சித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close