JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
தமிழ்நாடு 08 Jun, 2016 07:52 PM

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்ற மே 23-ம் தேதியில் இருந்தே பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வந்தாலும், இன்று அதிகாரமிக்க பொறுப்புகளுக்கு நியமிக்கப்படவர்கள் அனைவரும் தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் பணிபுரிய கூடியவர்கள்.

அந்த வகையில் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக 84-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த ராம் மோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆட்சி காலத்திலேயே முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணிபுரிந்தவர். தலைமை செயலராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டுள்ளார்.

அடுத்தபடியாக, பல்வேறு துறைகளை தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வரின் முதன்மை செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். முதலாவதாக, கடந்த ஆட்சி காலத்தில் முதல்வரின் முதன்மை செயலாளர்களில் ஒருவரான கே.என்.வெங்கட்ரமணன் முதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது முதன்மை செயலாளராக கடந்த ஆட்சி காலத்தில் கால்நடைத்துறை செயலாளராக இருந்த சிவ் தாஸ் மீனாவும், மூன்றாவது முதன்மை செயலாளராக வேளாண் துறை செயலாளராக இருந்த விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்காவது முதன்மை செயலாளராக ஏற்கனவே அதே பொறுப்பை வகித்து வரும் ராமலிங்கமே நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள அதே வேளையில், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் பட்டியலில் புதிதாக ஷாந்த ஷீலா நாயரும் இடம்பெற்றுள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசின் ஆலோசகர்களாக கடந்த பல வருடங்களாக இருந்து வருபவர்கள் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி ராமானுஜம். இவர்களுக்கு அடுத்தப்பட்டியாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலேயே பணிப்புரிய கூடிய சிறப்பு பணி அதிகாரியாக முன்னாள் திட்ட கமிஷன் தலைவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் வட்ட அதிகாரிகளின் மாற்றம் அரசின் செயல்பாடுகளிலும் அடுத்தடுத்து மாற்றங்களை கொண்டு வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads