[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

private-school-teacher-suicide-in-school-building-in-chennai

சென்னையில் பள்ளி வளாகத்திற்குள், ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிழக்குகடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த பாண்டியன் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் நாகர்கோவிலை சேர்ந்த ஜெனிபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஓர் ஆண்டு காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் அவர் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பள்ளியின் ஊழியர்கள் கதவை தட்டியும் வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பள்ளி ஊழியர்கள் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நீலாங்கரை பள்ளிக்கு வந்து கதவை உடைத்த போலீசார் ஆசிரியையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆசிரியை தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில், தன் இறப்பிற்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது சகோதரரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close