[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

“மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் மாநில ஆட்சி மாறும்” - ஸ்டாலின்

when-the-central-government-change-then-immediately-tn-govt-will-change-mk-stalin

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மறுநொடியே தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி இருக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்ற பொய் பிரசாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருவதாக கூறினார். எல்லா மதத்திற்கும் பொதுவான கட்சி திமுக என அவர் தெரிவித்தார். 

திமுக ஆட்சி அமைந்தவுடன், ஜெயலலிதாவின் மர்ம மரணம், கொடநாடு கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ஆகிய 3 விவகாரங்களில் தொடர்புடையவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தேர்தல் நேரத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாகக் கூறிய ஸ்டாலின், மத்தியிலும், மாநிலத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close