[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

கொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற தாய் மகன் கொடூரக் கொலை

mother-and-son-murder-near-tiruthani

நகைகள் கொள்ளையடிப்பதை தடுத்த தாய் மகன் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரக்கோணம் சாலை பி.டி.புதூர் பாலாஜிநகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் எகிறி குதித்து உள்ளே சென்று பார்த்தபோது தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் அவரது மனைவி வீரலட்சுமி பிணமாக கிடந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் உள்ளே சென்று பார்த்தபோது அவரது 10 வயது மகன் போத்திராஜ்  இஸ்திரி பெட்டி ஒயர் மூலம் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் செய்வதறியாது உறைந்து போனார். 
மனைவி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து பெருமாள் திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படடன.

இந்த கொடூரமான கொலை குறித்து திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனின் சடலத்தைய கைப்பற்றிய போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 21 சவரன் நகைக்காக மனைவி மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close