[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் - முதல்வர், ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

high-court-condemned-to-edappadi-and-stalin

கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும் ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருவதாக அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

இதையடுத்து, இந்த தடையை நீக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது தொடர்ந்து ஸ்டாலின் அவதூறாக பேசி வருவதாகவும் அதை நிறுத்தாவிட்டால் தடையை நீக்கி வழக்கை சந்திக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் ஸ்டாலின் குறித்து எடப்பாடியும், முதலமைச்சர் குறித்து ஸ்டாலினும் பேசியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் முதல்வர் குறித்து பேசிய வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அதேபோல் ஸ்டாலின் குறித்து முதல்வர் பேசியதையும் நீதிபதி முன் எடுத்துரைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இளந்திரையன், கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும் ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுத்தியுள்ளார். இறுதி வாதத்திற்கு புதன்கிழமை வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close