[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

விபத்தில் சிக்கிய தம்பதி : முதலுதவி செய்து உயிரைக் காத்த ஆட்சியர்

namakkal-collector-recover-a-couple-and-save-their-life

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியினரை மாவட்ட ஆட்சியர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆய்வு செய்வதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்தனர். இதைக் கண்ட ஆட்சியர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு முதலுதவி வழங்கினார்.

அத்துடன் மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வாகனத்தில் அந்த தம்பதியினரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். உரிய நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அந்த தம்பதியினர் உயிர் பிழைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்ததில், அந்த தம்பியினரின் பெயர் கங்காதரன் மற்றும் நிர்மலா என்பது தெரியவந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close