[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொடூர கொலை? 4 தனிப்படைகள் அமைப்பு

19-year-old-missing-girl-found-dead-near-pollachi

கோவையில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த 20 வயது மாணவி காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற காவலர்கள், முட்புதருக்குள் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். 

விசாரணையில் அவர், கல்லூரியில் இருந்து காணாமல் போன மாணவி என தெரியவந்தது. அவரது உடலில் இருந்து நகைகள் எதுவும் திருடப்படவில்லை என்பதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

கொடூரமாக கொல்லப்பட்ட அந்த பெண்ணுக்கு, அடுத்த மாதம் திருமண நிச்சயம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பான அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அப்பெண்ணின் செல்போன் சிக்ன லை வைத்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close