[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளை அடித்த பெண்

women-arrested-in-cheating-case

ஈரோடு அருகே ஆண் வேடமிட்டு சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி நகைகளை கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு அருகே கொடுமுடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உறவுக்காரர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றபோது, விஷ்ணுபாலா என்ற இளைஞர் சுதாவிடம் நட்பாக பழகியுள்ளார். அவர், இருவரும் உறவுக்காரர்கள் தான் எனக் கூறியதால் சுதா மிகவும் நம்பி விஷ்ணு பாலாவிடம் பழகியுள்ளார். இதனையடுத்து சுதாவை காதல் வலையில் வீழ்த்திய விஷ்ணுபாலா, பின்னர் சுதாவின் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் வருவதும், போவதுமாக இருந்துள்ளார்.

இதனிடையே சுதாவின் வீட்டு பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுதாவிடம் அவர்களின் பெற்றோர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆண் நண்பருக்கு கொடுத்துவிட்டதாக சுதா கூறியுள்ளார். விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க போலீசாரிடம் புகார் அளிக்காத சுதாவின் பெற்றோர், மறைமுகமாக விஷ்ணுபாலாவை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அந்த இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே வீட்டில் இருந்து மறுபடியும் 3 சவரன் நகைகள் பறிபோயுள்ளது. அப்போது இளைஞர் விஷ்ணுபாலாவை தான் காதலிப்பதாகவும், அவர் மிகவும் பணத் தேவை இருப்பதாக கூறியதால் வீட்டிலிருந்த 3 சவரன் நகைகளை கொடுத்து அனுப்பியதாகவும் சுதா கூறியுள்ளார்.

இதனையடுத்து நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பெற்றோர் இதுகுறித்து காவல்நிலைத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சுதாவை செல்போன் மூலமாக விஷ்ணுபாலாவிடம் பேசவைத்த போலீசார், வீட்டில் தனியாக இருப்பதாகவும் அதனால் வீட்டிற்கு வருமாறும் கூறி அழைக்க வைத்தனர்.

விஷ்ணுபாலாவும் சுதாவின் வீட்டிற்கு வந்தபோது, போலீசார் விஷ்ணுபாலாவை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர் ஆண் வேடமிட்ட பெண் என்பது தெரியவந்தது.  அவர் காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்பதும், பெண்கள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது. சிறுமிகள் என்பதால் எளிதாக ஏமார்ந்து விடுவார்கள் என்பதால் சிறுமி சுதாவை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. சரோஜாவிடம் இருந்து தற்போது 3 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close