[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

கொலைக்கும் தற்கொலைக்கும் நானே பொறுப்பு சேலத்தில் - காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் !

a-man-killed-a-women-in-salem

சேலத்தில் "நான் செய்யப்போகும் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு" என காவல்துறைக்கு கடிதம் எழுதிவிட்டு பெண்ணின் கழுத்தை அறுத்து  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு கடந்த ஆறு மாதகாலமாக ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஷரீன் சித்தாரா பணியாற்றி வந்துள்ளார். இன்றுகாலை கடையை திறந்தவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியே சென்ற பாண்டியராஜன் திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகுநேரமாக அக்கம்பக்கத்தினர் உதவியோடு ஷட்டரை திறக்க முயற்சித்தும் முடியாததால்  சந்தேகமடைந்த பாண்டியராஜன் உடனடியாக சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். 

Image result for தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஷட்டரை உடைத்து பார்த்தபோது ஷரீன்சித்தாராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 54 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஷரீன் சித்தாராவுக்கும், அதேபகுதியை சேர்ந்த  இனாமுல்லாஹ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த இருவரின் குடும்பத்தினரும் கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று காலை ஷரீன் சித்தாராவை சந்திக்க இனாமுல்லாஹ் அவர் பணியாற்றும் கடைக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரமடைந்த இனாமுல்லாஹ் கத்தியால் ஷரீன் சித்தாராவின் கழுத்தை அறுத்துவிட்டு உடனடியாக அதேகடையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜங்ஷன் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக உடனடியாக ஏராளமானோர் அங்கு குவிந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்ட காவல்துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 9 பக்க கடிதம் சிக்கியுள்ளது. காவல்துறைக்கு இனாமுல்லாஹ் எழுதிய அந்தக் கடிதத்தில் நான் செய்யப்போகும் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்கூட்டியே திட்டமிட்டே இனாமுல்லாஹ் அங்கே சென்றுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close