[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை

heavy-rain-in-tamil-nadu

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சில இடங்களில், மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை, சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. கிருஷ்ணகிரி நகரின் பழையபேட்டை, ரவுண்டானா, காந்திரோடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தர்மராஜா கோவில் தெரு, காந்திநகர் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிபூண்டி, திருத்தணி, திருவள்ளூர், திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில், கனமழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, குடியாத்தம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட ஊர்களிலும‌, மதுரை மாவட்டம், மதுரை திருமங்கலம், அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பதிவானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close