[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

கொடுத்த கடனை திரும்ப தராததால் மன உளைச்சல் ! மூன்று பேர் தற்கொலை

the-3-family-people-are-commit-suicide-because-of-depression-of-debt

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராமன். இவர் தனது மனைவி புஷ்பா மற்றும் மகன் பாபு ஆகியோருடன் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். கண்பார்வையற்ற மகனோடு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Image result for கடன் தொல்லை

இதனிடையே சிவராமன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அதில் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வரும் சிவராமன், தான் சிறுகச் சிறுக சேமித்து வைத்த ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரத்தை தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த நாதர் சண்முகம் மற்றும் அவரது சகோதரி பத்மினி ஆகியோருக்கு கடனாகக் கொடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு கடன் கொடுப்பதில் கிடைக்கும் மாத வட்டி வைத்துக் கொண்டு தனது பார்வையற்ற மகன் மற்றும் மனைவி உடன் வாழ்ந்து வந்ததாகவும், இந்த நிலையில் கடன் வாங்கியவர்கள் வட்டியையும் கொடுக்காமல் கடனையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.மேலும் பணத்தை கொடுக்குமாறு கேட்டபோது மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. போதிய வருவாயின்றி இளைய மகன் வெங்கடேஷ் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த சிவராமன் நான் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Image result for பெண் கைது

இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பத்மினியை கைது செய்துள்ளனர் மேலும் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் மகன் சண்முகத்தை தேடி வருகின்றனர். பொதுவாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களில் அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இங்கு அதற்கு மாறாக, கொடுத்த கடனை திரும்ப பெற வழி இன்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close