[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை எஸ்.பி., பாண்டியராஜன் மாற்றம்: புதிய எஸ்.பியாக சுஜித்குமார் நியமனம்

coimbatore-police-sp-pandiarajan-transfered

பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி,.பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது அடையாளத்தை கோவை எஸ்.பி பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வராமல் செய்யும் வண்ணம், கோவை எஸ்பி பாண்டியராஜனின் செயல்பாடுகள் உள்ள தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டங்கள் வலுத்து வந்தன.

(சுஜித்குமார்)

இந்நிலையில் அவர் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன், மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் ஆய்வாளர் நடேசன் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். கோவைக்கு புதிய எஸ்.பியாக சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி டிஎஸ்.பியாக சிவகுமாரும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக வெங்கட்ராமனும்  நியமிக்கப்பட் டுள்ளனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித் துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close