[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பள்ளி மாணவியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் கைது!

school-girl-abused-in-tn-auto-driver-booked-under-pocso

தேனி மாவட்டம் போடி அருகே 12ம் வகுப்பு மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஒட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் 17 வயது மாணவியை அவரது வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டி(23) என்பவர் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்வதால், வீட்டில் இல்லாத சூழலில் சிறுமியை கவனிக்க நேரமின்றி இருந்துள்ளனர்.

இதையடுத்து ஒருநாள் மாணவியின் தாயார் அவரை எங்கு சென்றிருந்தாய் என கேட்கும்போது, மாணவி நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் 
தாயார் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close