[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு

income-tax-raids-at-durai-murugan-house-ends

திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு தொடங்கி நடந்த சோதனை நிறைவடைந்தது.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு பத்தரை மணிக்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் நடைபெறும் சோதனையைப் போல, வாணியம்பாடியில் உள்ள திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தேவராஜின் வீட்டில் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஆவணங்களோ, பணமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதேபோல, காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், பள்ளியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை எட்டரை மணி அளவில் நிறைவடைந்தது‌.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “ தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எங்கள் வீட்டில் சோதனை நடத்தவேண்டிய காலம் இது அல்ல. தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? போன மாதம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கலாமே? பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை நாங்கள் நடத்தவில்லை, சாதாரண கல்லூரியை நடத்தி வருகிறோம். வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது; அதை திசைதிருப்பவே சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

மன உளைச்சலை ஏற்படுத்தி, அச்சத்தை ஏற்படுத்தி பணிய வைத்துவிடலாம் என்று சோதனை நடத்துகிறார்கள். இது மத்திய, மாநில அரசு நடத்தியுள்ள சோதனை. வருமான வரித்துறை மூலம் எங்கள் முதுகில் குத்துகிறார்கள். நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறை சோதனை மூலம் சூழ்ச்சி செய்கின்றனர். மக்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்பது தெரியும். மிரட்டுவது,‌ பொய் வழக்கு போடுவது, பூச்சாண்டி காட்டுவதை கண்டு திமுகவினர் அஞ்சமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் ஜெ என்று சொல்வார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். சோதனை முடித்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர், நானும் என் பிரசார பணிக்கு கிளம்பிவிட்டேன்” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close