[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

“இந்தியா வளரவில்லை; தளர்ந்துள்ளது” - ஸ்டாலின் விமர்சனம்

mk-stalin-comment-about-india-growing-and-modi-government

மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடையவில்லை, தளர்ச்சி அடைந்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக தலைமையிலான அணி தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதில், பிரதமர் மோடி வாக்குறுதிகளை அளித்த நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிகாட்டினார். 

தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாவதற்கான சூழல் தமிழகத்தில் ஏற்படவில்லை என்றார். தேர்தல் காரணமாக தமிழகத்திற்கு வந்த மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினால் போதுமா எனவும் அவர் வினவினார். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதுதான் மத்திய அரசின் சாதனை எனக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன், விவசாயக் கடன் ஆகியவை ரத்துச் செய்யப்படும் என வாக்குறுதியளித்தார். மேலும் மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடையவில்லை, தளர்ச்சி அடைந்திருக்கிறது என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close