[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

4 மணி நேர தாமதத்திற்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு

dmk-candidate-kanimozhi-nomination-accepted-at-after-4-hours-delay

தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோன்று அதிமுக-பாஜக-தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரண்டு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் நிறைவடைந்த நிலையில், இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் எம்.பி கனிமொழியும், பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜனும் போட்டியிடுகின்றனர். இதற்காக இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இன்று பரிசீலனையின் போது, தமிழிசையின் மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் கீழ் அலுவல் சாரா இயக்குநராக வகித்த பதவியை மனுவில் குறிப்பிடாததால், மனு பரிசீலனையில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோன்று கனிமொழியின் வேட்புமனு பி-2 படிவத்தை நிரப்பாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் 4 மணி நேர பரிசீலனை செய்யப்பட்டு, அவரது மனுவும் ஏற்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close