[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

“பாஜக அரசு விவசாயிகளின் கழுத்தை நெரிக்கிறது” - ஸ்டாலின்

modi-s-bjp-government-killing-farmers-mk-stalin

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகளின் கழுத்தை நெரித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற பரப்புரைப்‌ பொதுக்கூட்டத்தில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்றத்‌ தொகுதி வேட்பாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது‌, முந்தைய காலங்‌களில் தான் கட்சிப் பணிகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தபோது, ஏற்பட்ட இனிய அனுபவங்களை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். பின்னர் பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசிய அவர், விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த அரசு மோடி அரசு என்று குறிப்பிட்டார். அத்துடன் விவசாயிகளின் கழுத்தை பாஜக அரசு நெரிப்பதாக கூறினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில், திமுகவை சம்பந்தப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், முறையான விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close