[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

போலி கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது: ராமதாஸ்

ramadoss-about-opinion-poll

போலி கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஆய்வக கருத்துக் கணிப்பு மோசடியானது என்று கூறியுள்ளார்.

அதிமுகவும், திமுகவும் ஊழலில் திளைத்துள்ள கட்சிகள் என்றும், அக்கட்சிகள் மக்களை மதுமயக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழலும், மதுவும் முக்கிய பிரச்னையாக இருக்கும் போது அதிமுகவும், திமுகவும் அதிக வாக்குகளை பெறும் என்று கூறுவது முரண்பாடானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் வெறும் 5 ஆயிரத்து 464 பேரிடம் மட்டும் கருத்து கேட்டு முடிவுகளை தெரிவிப்பது கருத்துத் திணிப்பே என்றும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close