[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் உயிரிழப்பு

judge-house-security-police-try-to-attempt-suicide-in-chennai-and-he-is-death-today

சென்னை அடையாறில் நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் இன்று உயிரிழந்தார்.

சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி முரளிதரன் வீட்டில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையை சேர்ந்த 29 வயதாகும் சரவணன் என்பவர் கடந்த 20 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் காவல்துறையினர், சரவணனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில் தன்னுடையை தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், தன்னுடைய பெற்றோரை நன்றாக பார்த்துக்கொள்ளும்படியும் எழுதியிருந்தார். மேலும், தான் இறந்த பிறகு தனக்கு கிடைக்கும் பணத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தன்னுடைய காக்கி உடையை கழற்றக்கூடாது என்பதே கடைசி ஆசை எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனிடையே, காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close