[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரசவத்தில் குழந்தை தலை துண்டான விவகாரம் : மனித உரிமை ஆணையம் வழக்கு

baby-head-broken-issue-human-rights-filed-case-about-that

பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை - ஆவடி அருகே அயப்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜனின் மனைவி மனைவி பொம்மி, பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு, கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், பணியிலிருந்த செவிலி முத்துக்குமாரி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில், குழந்தையின் தலை துண்டானதோடு, உடல்பகுதி பொம்மியின் வயிற்றிலேயே சிக்கியது. 

பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, குழந்தையின் உடல் அகற்றப்பட்டது. குழந்தை பிரசவத்திற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி தானாக முன்வந்து வழக்காக எடுத்தார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவர் ஆணையிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close