[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

‘இரண்டு ஆயிரம் வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பு’ - தமிழக அரசு

rs-2-thousand-fund-scheme-was-stopped-for-election-tamil-nadu-government

நலிவடைந்த குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை நிறுத்திவைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நலிவடைந்த சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. அதற்கான கணக்கெடுப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. இந்தத் திட்டத்தை எதிர்த்து, விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், நலிவடைந்த குடும்பங்களை 7 பேர் கொண்ட குழுவே நிர்ணயிக்கும் என அரசு தெரிவித்திருந்தாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அரசாணை வெளியிட்டபோது 9 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. இது அரசியல் ஆதாயத்திற்காக மாற்றப்பட்டு, அதிக மக்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மனுதாரர் தாக்கல் செய்தது வரைவு அரசாணை, அரசு தாக்கல் செய்ததே அசல் அரசாணை எனத் தெரிவித்தார். அத்துடன் 9 பேர் கொண்ட குழுவை நியமித்தது தான் இறுதி அரசாணை என தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.2000 வழங்கும் திட்டத்தையும், அதற்காக கணக்கெடுக்கும் பணியையும் நிறுத்தி வைத்துள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தனர். அத்துடன் அரசாணை எப்படி கசிந்தது என்பது தொடர்பாக விசாரிக்கவும் அறிவுறுத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close