[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பட்டப் பகலில் இளைஞரை சாலையில் தாக்கிய கும்பல் ! (வீடியோ)

mob-attacks-youth-in-kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மக்கள் அதிகம் நடமாடும் சாலையில், 5 பேர் கும்பல் ஒருவரை அடித்து உதைத்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுப்பணித் துறை அலுவலகச் சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியபோது, அந்த நபர் தப்பித்து, அருகிலுள்ள கடைக்குள் செல்வது காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து அங்கிருந்த பைக்கை உதைத்து கீழே தள்ளிய அந்தக் கும்பல், அந்த இளைஞர் பின் சென்று அவரை அடித்து, சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்ற சம்பவமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பட்டப்பகலில் மக்கள் அதிகம் நடமாடும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரித்தபோது புகார் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close