[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் பரவலாக மழை

rain-in-tamil-nadu

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டம், திருவையாறு பாபநாசம், பட்டுக்கோட்டை பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

மதுரை மாநகர் பகுதிகளான அண்ணாநகர், மாட்டுதாவணி பேருந்துநிலையம், தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதேபோல், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், திருமானூர் ஆகிய பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், பரவலாக மழை பெய்துவருவதையொட்டி மகி‌ழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி,‌ பழவேற்காடு சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் ‌கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்தடை ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close