[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

makkal-needhi-maiam-leader-kamal-hassan-announced-1st-batch-candidates-list

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. மற்ற சில கட்சிகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். 

அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் (தனி) - லோகரங்கன்

சென்னை வடக்கு - மெளர்யா

மத்திய சென்னை - கமீலா நாசர் (நடிகர் நாசரின் மனைவி)

திருப்பெரும்புதூர் - சிவக்குமார்

அரக்கோணம் - ராஜேந்திரன்

வேலூர் - சுரேஷ்

கிருஷ்ணகிரி - ஸ்ரீ காருண்யா

தர்மபுரி - ராஜசேகர்

விழுப்புரம் (தனி) - அன்பின் பொய்யாமொழி

சேலம் - பிரபு மணிகண்டன்

நீலகிரி - ராஜேந்திரன்

திண்டுக்கல் - சுதாகர்

திருச்சி - ஆனந்த ராஜா    

சிதம்பரம் - ரவி

மயிலாடுதுறை - ரிஃபாயுதீன்

நாகப்பட்டினம் - குருவைய்யா

தேனி - ராதாகிருஷ்ணன்

துத்துக்குடி - பொன். குமரன்

நெல்லை - வெண்ணிமலை

கன்னியாகுமரி - எபினேசர்

புதுச்சேரி - சுப்ரமணியன்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close