[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தந்தையால் பாலியல் தொந்தரவு: பாதுகாப்பு கோரி இளம் பெண் போலீஸில் புகார்

sexual-harassment-to-girl-from-her-father

தனது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அவரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வலியுறுத்தி 19 வயது இளம்பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், “ கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடால் எனது தாயும் தந்தையும் பிரிந்துவிட்டனர். இதனால் ஆதரவு இல்லாததால் சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன். இதனிடையே கடந்த மார்ச் மூன்றாம் தேதி சென்னை வந்த எனது தந்தை, என்னை கோயில் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று கூறி ஊருக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்தார்.

கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி என்னை அடைத்து வைத்து, வெளியே சென்றாள் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதன் பின்பு வீட்டிலிருந்து தப்பித்த நான் இதுகுறித்து எனது சகோதரியிடம் தெரிவித்தேன். இதனிடையே எனக்கும் எனது சகோதரியின் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்பும் எனது தந்தை, என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனால் உயிருக்கு பயந்து தற்போது புதுக்கோட்டை எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளேன். எனது தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுபோல், எனது சகோதரிக்கும் ஏற்கெனவே பாலியல் தொல்லை கொடுத்துள்ளோர். அது குறித்து அப்போதே, திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது தந்தையிடமிருந்து பாதுகாக்க எனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அப்பெண் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close