[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டி

vck-candidate-ravikumar-will-contest-dmk-s-symbol

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தெரிவித்துள்ளது.

திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிதம்பரத்தில் தொல். திருமாவளவன்  போட்டியிடு வார்கள் என்று அவர் அறிவித்தார். இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், தனி சின்னத்திலும் விழுப்புரத்தில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும்  போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ’’விழுப்புரத்தில் ஏற்கனவே ஸ்டார் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறோம். இப்போது அந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறோம். அந்த தொகுதியின் கூட்டணி சக்தி, விடுதலை சிறுத்தைக் கட்சியின் வலிமையை கருத்தில் கொண்டு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் கேட்ட சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. மூன்று பட்டியல் அனுப்பியும் இன்னொரு பட்டியல் கேட்டிருக்கிறார்கள். நான்காவதாக ஒரு பட்டியலை அனுப்பியிருக்கிறோம்.

சிதம்பரம் தொகுதியில் ஐந்தாவது முறையாக நான் போட்டியிடுகிறேன். அந்த தொகுதி வாக்களர்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன். அந்த வாக்காளர்கள் எனக்கு வாக்களித்து ஆதரவு நல்கியவர்கள். அதனால் தனி சின்னத்தில் போட்டியிடுகிறேன். விழுப்புரம் தொகுதியில் உள்ள அனைத்துச் சூழலையும் ஆய்வு செய்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

வன்னியர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் ஏதும் தூண்டிவிடுவார்கள். அதற்கு யாரும் இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close