[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி 

tn-cm-palanisamy-meets-dmdk-s-leader-vijayakanth


சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாமக 7, பாஜக 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.  அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தொகுதி ஒப்பந்தம் முடிந்தவுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டாலும், விஜயகாந்த் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. தன்னால் தற்போது பேசமுடியாது என்று சைகை மூலமாகவே தெரிவித்தார். 

இந்நிலையில் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். வீட்டிற்கு வந்த முதல்வரை பிரேமலதா விஜயகாந்த் வரவேற்றார். விஜயகாந்தை சந்தித்த முதல்வர், அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொடுத்து கொடுத்தார்.

பதிலுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சரை விஜயகாந்த் வரவேற்றார். கூட்டணி கட்சி தலைவர்களை முதலமைச்சர் தன்னுடைய இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்து வரும் நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விஜய்காந்தை அவருடைய வீட்டுக்கு சென்றே சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close