[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

பண‌ப்புழக்கம் தெரியவந்தால் புகார் அளிக்கலாம் : வருமான வரித்துறை அறிவிப்பு

income-tax-department-says-if-cash-flow-is-revealed-you-can-file-a-complaint

பொதுத்தேர்தலில் கணக்கில் வராத ‌பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கணக்கில் வராத பணத்தை எடுத்துச் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கணக்கில் வராத ‌பணம் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு  வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் பெரிய அளவில் ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது ‌இடமாற்றம் செய்ய‌ப்படுவதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கலாம் என வருமா‌ன வரித்துறை தெரிவித்துள்ளது. 

Related image

மேலும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் ஓரிடத்தி‌லிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தாலும் தகவல் அளிக்கலாம் என்றும்  வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது தவிர தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக‌ வைக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சே‌ரி மக்கள் தகவல் அளிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமை‌க்கப்பட்டுள்ளதாகவு‌ம் அத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 18004256669 அல்லது 044-28262357 என்ற தொலைபேசி எண்ணி‌லோ அல்லது 9445467707 என்ற வாட்ஸ்அப் எ‌ண்ணிலோ த‌கவல் கூறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது, 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close