[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : குற்றவாளிகள் வீடுகளில் சிபிசிஐடி தொடர் சோதனை 

cbcid-police-has-continue-search-in-criminals-house-in-pollachi-harassment

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களுடன் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். தற்போது அவரது உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. பின்னர் அங்கிருந்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  சதீஷ், வசந்தகுமார் ஆகியோரது வீடுகளிலும் மற்றும் சின்னப்பன் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருவதால் இங்கு பொதுமக்கள் பரபரப்பாக காணப்படுகின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள் நால்வரையும் சிபிசிஐடி போலீசார் அவர்களது காவலில் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close