[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

“காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும்” - கே.எஸ்.அழகிரி

congress-candidates-list-will-be-announce-with-in-3-days-k-s-alagiri

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி மக்களவைத் தேர்தலில் மோதுகின்றன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கான தொகுதி ஒதுக்கீடுகள் முடிவடைந்துவிட்டன. அதேசமயம் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 3 தினங்களில் வெளியாகும். ராகுல் காந்தி வருகையை தொடர்ந்து தமிழிசை தெரிவித்த கண்டன கருத்தில் எந்த ஒரு பொருளும் இல்லை. இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் என்ன செய்தது என்று தமிழிசை கேட்பது விசித்திரமாக உள்ளது. நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தான் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி கொள்ளப்பட்டனர். பாஜக-வில் நாட்டிற்காக போராடியவர்களில் இருந்து ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்” என தமிழிசை கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close