[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

வனத்துறை அலுவலர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

the-man-was-arrested-for-sexual-harassment-in-ramanathapuram

ராமநாதபுரம் அருகே வனத்துறை அலுவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த மாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தமிழக அரசின் வனத்துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாதவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும்  தனது உறவினா் இல்ல நிகழ்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது சோனையன் கோயில் அருகில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மது போதையில் மாதவியிடம் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

Image result for பாலியல் தொல்லை

அப்போது திருநாவுக்கரசுக்கும் ராகுலுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து இளஞ்சம்பூர் காவல்நிலையத்தில் மாதவியும் அவரது கணவர் ராகுலுடன் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மது போதையில் இருந்த திருநாவுகரசு என்பரை இளஞ்சம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close