[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
  • BREAKING-NEWS பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டித்தது பொள்ளாச்சி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை!

“என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க சி.எம்” : பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமல்ஹாசன் கேள்வி

kamalhassan-condemn-to-pollachi-sexual-abuse

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில்‌ நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்‌டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  குற்றவாளிகளுக்கு தரப்படும் தண்டனை, அனைத்து பெண்களுக்கும் தமிழக அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கேள்விகளையும், கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

 

மேலும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் “அந்த பெண் அலறிய குரலை நினைத்துப் பார்க்கும்போது மனம் பதறுகிறது,பயம், தவிப்பு கலந்த அந்த பெண்ணின் குரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.வழக்கை விசாரிக்கும் எஸ்.பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிவிட்டாரா? பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அவமானதை எப்படி துடைக்கப்போறீங்க சாமி? இன்னும் ஏன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இதனையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, அரசு மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : கமல்Kamal
Advertisement:
Advertisement:
[X] Close