[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் நியமனம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான பரப்புரையை நாளை திருவாரூரில் தொடங்கும் நிலையில், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களவை தேர்தலில் 1 தொகுதி, இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் இந்திய குடியரசுக் கட்சி போட்டி - சே.கு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி)
  • BREAKING-NEWS பாதுகாப்பு படைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாளை மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார் கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டித்தது பொள்ளாச்சி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நீதிபதி கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திய கணவன்! மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை!

7ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பம் - தாயின் 2வது கணவனின் கொடூரச் செயல்

7th-std-school-girl-pregnant-mother-s-2nd-husband-harassed

பழனியில் 12 வயது சிறுமியை தாயின் 2வது இரண்டாவது கணவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த நிலையில், அவர் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து பழனி சார் ஆட்சியர் அருண்ராஜுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பிலிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரை பெற்ற சார் ஆட்சியர் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்திரவு பிறப்பித்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் தாய் மாரியம்மாளின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் இந்த இரக்கமற்ற செயலுக்கு காரணம் என்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக அவன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், அந்தக் கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close