[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை - திருச்சியில் சோகம்

a-family-as-commit-suicide-at-trichy

திருச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள பாரி தெருவில் வசிப்பவர் பாலசகாயராஜ் (49). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு யுவராணி(40) என்ற மனைவியும், முத்துலட்சுமி(22) என்ற மகளும் உள்ளனர். இவர்களது மகன் நந்தகுமார்(18) உடல்நிலை சரியில்லாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து அவர்கள் தாங்கள் வசித்து வந்த செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியில் இருந்து பாரி தெருவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் இவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள யாரிடமும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related image

இவர்களது வீடு கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி மாத வாடகை பணம் வாங்குவதற்காக சகாயராஜ் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், வீட்டிற்கு நேரிலேயே வந்துள்ளார். அவர்களின் வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொன்மலை காவல்நிலையத்திற்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்தார். பின்னர் அங்கு வந்த பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் காவேரி, அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கண்டதும் தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து பின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Image result for suicide

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மகனும் இறந்து விட்டதால் இவர்களுடைய குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு கடன் பிரச்சினைகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களுடைய இழப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் யுவராணியின் அக்கா சுசீலாவிற்கு தரவேண்டிய 50 ஆயிரத்துக்கு சகாயராஜ் ஓட்டி வந்த ஆட்டோவை விற்று அந்த பணத்தை எடுத்துக் கொள்ளுமாறும் எழுதப்பட்டிருந்தது. தங்களுடைய இறப்பு செய்தியை தன் தந்தை வீட்டாருக்கு தெரிய படுத்த வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பால சகாயராஜ் அக்கா மகள் கூறுகையில் சென்ற வாரம் அவர்களை வீட்டிற்கு சென்று பார்த்ததாகவும், அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பழக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டார். அவருடைய மகன் இறந்த துக்கத்தில் தான் குடும்பத்தினர் தற்கொலை செய்து இருப்பார்கள் என்று தெரிவித்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை கொண்டது குறித்து பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் காவேரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close