[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

‘செல்போன்கள் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தானவை’ - நீதிபதிகள் வேதனை

websites-and-alcohol-are-the-biggest-issues-for-society

ஆபாச வலைத்தளங்கள் மற்றும் மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்னைகளாக காணப்படுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இணையதளத்தின் பயன்பாட்டால் உலகம் சுருங்கி ஒவ்வொருவரின் உள்ளங்கையில் உள்ளது. முன்பு இணையதளத்தை பயன்படுத்த இணையதள மையங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர். அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தை சார்ந்தே இருக்கின்றன. அதே சமயம் அதன் தீங்குகளும் வளரத்தொடங்கின. குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இது பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது.

Image result for செல்போன்கள்

Parental window என்ற மென்பொருளை பயன்படுத்தி சிறார்கள், தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக ஆபாச இணைய தளங்களை பார்க்க முடியாமல், தடை செய்து கட்டுபடுத்தலாம். இந்த Parental window என்ற மென்பொருள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இணைய சேவை வழங்குவோரின் கடமை. இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்திய தொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார். 

Related image

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இணைய சேவை முறைப்படுத்தப் படாததே சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் என தெரிவித்தார். 
அப்போது, “பேஸ்புக் செல்போன் ஆகியவற்றின் பயன்பாடு இன்று அதிக அளவில் உள்ளது. செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம். இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அது நீதிமன்றத்தின் பணி மட்டுமல்ல. 

Image result for madurai high court

ஆபாச வலைத்தளங்கள், மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வளமான எதிர்காலத்தையும் சிந்தனையும் இழக்கும் நிலை உருவாகும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து இணைய சேவை வழங்குவோர் சங்க செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close