[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

can-not-change-parliament-election-date-in-madurai-madurai-high-court

மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா வருடம் தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

      

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். காவல்துறையினரும் அன்றைய தினம் போதுமான பாதுகாப்பை வழங்க இயலாது என்றும், தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தரம் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் உதவியுடன் தேர்தலை நடத்த முடியும் என்றும் வாக்குப் பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. 

இதனையடுத்து, விழாவை கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடைமைக்காக தேர்தலை நடத்தக் கூடாது என்று தெரிவித்தனர். பல லட்சம் பேர் பங்கேற்கும் சித்திரை விழாவுடன் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என்றும் நீதிபதிகள் கூறினர். 

         

மதுரையில் தேர்தலை ஒத்தி வைக்க முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாளை பதில்மனு தாக்கல் செய்த தவறினால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close