[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தமிழகம் முழுவதும் கட்சி பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

political-banner-banned-in-tamilnadu

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 702 பறக்கும் படைகள் மற்றும் 702 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், " வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு. அதனை தவிர்க்கும் வகையில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பல்வேறு சட்டங்களும் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பதை மக்களும், வேட்பாளர்களும் உணர வேண்டும். அது தவிர்க்கப்பட்டால் மட்டுமே நியாயமாக தேர்தல் நடைபெற்று, சரியான நபரைத் தேர்வு செய்ய இயலும்.

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளோடு இணைந்து இது போன்ற குற்றங்களை கண்டும் காணாமல் செல்கின்றனர். ஆகவே, வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்பதை செய்தித்தாள், ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும். பணம் கொடுப்பதைத் தடுக்கும் கண்காணிப்புக் குழுக்களை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்,  வாக்குக்கு பணம் குறித்த புகார் அளிப்பதற்கான எண்ணை விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும், தேர்தல் விதிமீறல்கள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதற்கு காரணமான அரசியல் கட்சியிடமிருந்து மொத்த செலவுத்தொகையையும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கெனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. ஆகவே, தமிழகத்தில் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது. ஆகவே அரசியல் கட்சியினரின் கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதேபோல அரசியல் கட்சியினரின் கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பெரும் அளவில் மக்களை அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில், அனைத்து அரசியல் கட்சியினரையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close