[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்தப்படும் - மாநில மகளிர் ஆணையம்

if-need-we-will-enquiry-with-jeyaraman-s-son-says-state-women-s-commission

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்தப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்ததன் அடிப்படையில், விசாரணை நடத்துகிறோம். காவல் துறை முறையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தப் பிரச்னையை ஊடகங்கள் தான் வெளியில் கொண்டு வந்தன. ஆனாலும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் குறைகளை சொன்னால், நடவடிக்கை எடுப்போம்.அப்பெண்களை சார்ந்தவர்கள் புகார் அளித்தாலும் விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரத்தை வெளிப்படுத்தக் கூடாது எனவும், ரகசியமாக விசாரணை நடத்துவோம் எனவும் கூறிய அவர், பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம் என தெரிவித்தார். 

இவ்வழக்கில் தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம் எனவும், இந்த வழக்கு குறித்த அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்திடம் சமர்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 044 2855155, 04428592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் எனவும், பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம் எனவும் அவர் உறுதி அளித்தார். 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான  செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு கண்ணகி பாக்கியநாதன் சரியான பதிலை அளிக்காமல் கேள்விகளை கடந்து சென்றதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close