[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது வழக்கு” - டிடிவி தினகரன்

admk-filed-case-on-me-for-political-reasons-ttv-dhinakaran

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமுமுக பொதுச் செயலாளர் தினகரன்,
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை வைத்த விவகாரம் தொடர்பாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பற்றியும் தெரிவித்த கருத்து தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசு குறித்து தினகரன் பேசிய கருத்தி குறித்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரண்டு அவதூறு வழக்குகளும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்பு ஆஜரானார்.

அப்போது அவதூறு வழக்கு குறித்த விவரங்களை தினகரன் முன் நீதிபதி வாசித்துக் காண்பித்தார். அதற்குப் பதிலளித்த தினகரன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தன்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறினார். தினகரனின் கருத்தைப் பதிவு செய்த நீதிபதி, இரண்டு வழக்குகளின் விசாரணையையும் வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close